மன்னார் முசலி பிரதேச செயலக அபிவிருத்தி குறித்து கலந்தாய்வு
(அஸ்ஹர் இப்றாஹிம்)
பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டினை செயல் படுத்தும் நோக்கில் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று அவர்களின் முக்கிய தேவைப்பாடுகளை கேட்டறிந்து அதனை செயல்படுத்தும் நோக்கில் முசலி பிரதேச செயலக பிரிவில் உள்ள 20 கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
பண்டாரவெளி, வேப்பங்குளம், அரிப்பு, அகத்திமுறிப்பு, சிலாபத்துறை, கொண்டச்சி ,முள்ளிக்குளம், மரிச்சுக்கட்டி ஆகிய பகுதிகளில் உள்ள பொது அமைப்புகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டன.
கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர்கள் காதர் மஸ்தான் தலைமையில் கலந்துரையாடல் இடம் பெற்றது.
இந்நிகழ்வுகளில் குறிப்பிட்ட பிரதேச முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை