இலங்கை கிரிகெட்டின் சரா பெனல் நடுவராக தரமுயர்வு!

அபு அலா –

இலங்கை கிரிக்கெட் நடுவர் குழாம் தரம் 4 இல் இருந்து தரம் 3 இற்கான தரமுயர்வு போட்டி தேர்வு கடந்த வருடம் பெப்ரவரி மாதம் முதல் ஒக்ரோபர் மாதம் வரை கொழும்பு நாலந்தா கல்லூரி மற்றும் கெத்தாராம ஆர் பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானம் போன்ற இடங்களில் இடம்பெற்றது.

இதில் இலங்கை கிரிக்கெட் சபை, தேசிய ரீதியாக 25 நடுவர்களை மாத்திரமே அங்கீகரித்திருந்தது. அதற்கமைவாக திருகோணமலை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினூடாக மேற்படி தரமுயர்வில் பங்குபற்றிய சிஹான் சுஹூட் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ரீதியில் முதல் இடத்தினையும், தேசிய ரீதியில் நான்காவது இடத்தினையும் தக்கவைத்ததன் மூலம் திருகோணமலை மாவட்ட கிரிக்கெட்டிற்கு பெருமை சேர்த்தது மட்டுமல்லாது திருகோணமலை மாவட்ட கிரிக்கெட் வரலாற்றில் முதலாவது சரா பெனல் நடுவர் என்ற வரலாற்று ரீதியான சாதனையை படைத்துள்ளார்.

தற்போது இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிகெட் சபையின் தரம் 2 நடுவராக கடமையாற்றும் சிஹான் சுஹூட் இங்கிலாந்தின் சஸ்ஸெக்ஸ் பிராந்திய லீக்கின் முதல்தர நடுவருமாவார்.

மூதூர் மத்திய கல்லூரி, திருகோணமலை இ.கி.ச இந்துக்கல்லூரி மற்றும் மாவனல்ல சாஹிறா கல்லூரிகளின் பழைய மாணவரான சிஹான் சுஹூட், மூதூர் வெஸ்டன் வோறியஸ் அணியின் தலைவரும், திருகோணமலை நடுவர்கள் சங்கத்தின் சிரேஸ்ட உறுப்பினரும், மூதூர் யூ.டி.பி.எம் அமைப்பின் நடுவரும் பயிற்றுவிப்பாளரும் ஆவார்.

இத்தெரிவிற்காக இலங்கை கிரிக்கெட் தரம் 4 இல் அங்கம் வகிக்கும் 162 நடுவர்கள் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.