சுதந்திர தினத்தை ஒட்டி காரைதீவில் சிரமதானம்!
( வி.ரி. சகாதேவராஜா)
இலங்கை குடியரசின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு காரைதீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இன்று
(வெள்ளிக்கிழமை) கடற்கரை பகுதியை சுத்தம் செய்தனர்.
காரைதீவு பிரதேச செயலாளர் சிவ. ஜெகராஜன் தலைமையிலான பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ‘பிளாஸ்டிக் அற்ற வெள்ளிக்கிழமை’ என்கின்ற தொனியில் கடலோர சுத்தத்தை மேற்கொண்டனர்.
சிரமதானத்தில் பிரதேச சபை மற்றும் பொலிஸார் பங்கு பற்றினர்.
இவ் வேலைத்திட்டத்தை இன்று காலை 7 மணி முதல் 12 மணி வரை மேற்கொண்டனர்.
இதனால் கடலோரத்தின் பெரிய பகுதிகள் பிளாஸ்டிக் அற்ற பிரதேசமாக துப்புரவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை