சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒன்றிணைந்த சிரமதானப் பணி!
அபு அலா –
76 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு கிளீன் ஸ்ரீலங்கா, அறுகம்பை ஓட்டோ உரிமையாளர்கள் சங்கம் ஒன்றிணைந்த சிரமதானப் பணியை இன்று (சனிக்கிழமை) காலை பொத்துவில் பிரதேசத்தில் முன்னெடுத்தது.
சுதந்திர தின நிகழ்வை அறுகம்பை ஓட்டோ உரிமையாளர்கள் சங்கத்தால் பொத்துவில் அறுகம்பை பொது மைதானத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்தே இந்தச் சிரமதானப் பணியை முன்னெடுத்தது.
இந்தப் பணியில் ஓட்டோ உரிமையாளர் சங்கத்தின் தலைவரும் கிளீன் ஸ்ரீலங்காவின் தலைவருமான ஏ.முஸம்மில் மற்றும் அதன் செயலாளர் எச்.எம்.இமாம் மற்றும் அதன் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை