சனத் நிஷாந்தவின் மனைவி தேசிய பட்டியல் ஊடாக எம்.பி.!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவியான சட்டத்தரணி திருமதி சமரி பெரேராவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிப்பது தொடர்பில் அந்தக் கட்சியால் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஏற்கனவே கலந்துரையாடலை நடத்தியது.
குறித்த பிரேரணை கட்சியின் மத்திய குழு மற்றும் செயற்குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரேரணைக்கு கட்சியின் உயர்மட்ட தலைமையின் ஆசியும் கிடைத்துள்ளதாகத் தெரிய வருகிறது. (05)
கருத்துக்களேதுமில்லை