ஊடகவியலாளரும் அறிவிப்பாளருமான சணூன் விருது வழங்கிக் கௌரவிப்பு!
(கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்)
புத்தளம் ரெக்லா விளையாட்டு கழகம் புத்தளம் இஜ்திமா மைதானத்தில் தொடராக நடத்தி வரும் புத்தளத்தின் பாரம்பரிய விளையாட்டு போட்டியான மாட்டு வண்டி போட்டியில் கடந்த 04 வருடங்களாக அறிவிப்பாளராக கடமையாற்றியமைக்காக புத்தளத்தின் மூத்த ஊடகவியலாளரும் அறிவிப்பாளருமான எம்.யூ.எம். சணூன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். அத்தோடு இவர் ஊடகத்துறைக்கு பிரவேசித்து 43 வருடங்கள் நிறைவடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வின் அதிதிகளாக புத்தளம் நகர சபையின் முன்னாள் தலைவர் எம்.எஸ்.எம் றபீக், புத்தளம் நகர சபை முன்னாள் உறுப்பினர்களான றனீஸ் பதியுதீன் , பர்வின் ராஜா , ரெக்லா விளையாட்டு கழகத்தின் தலைவர் பாயிஸ் ஆகியோர் கலந்து கொண்டு மேற்படி விருதை வழங்கிவைத்தனர்.
கருத்துக்களேதுமில்லை