இடம்பெயர்ந்து இந்தியாவிற்கு சென்றவர்கள் முகாம்களைவிட்டு இங்கு மீள வரவேண்டும்! குடிவரவு குடியகல்வு திணைக்கள பிரதி கட்டுப்பாட்டாளர் ஈ.எச்.நயனா பிரசங்க தெரிவிப்பு

இடம்பெயர்ந்து இந்தியாவிற்கு சென்று முகாம்களிலும், வெளியிலும் இருப்பவர்கள் இங்கு மீள வரவேண்டும். அவர்களுக்கான பிரஜாவுரிமை வழங்கப்படும் என இலங்கை குடிவரவு குடியகல்வுத் திணைக்கள பிரதி கட்டுப்பாட்டாளர் ஈ.எச்.நயனா பிரசங்க தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில்  இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் –

நிரந்தரமாக  இந்த நாட்டு பிரஜைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அதன் வரப்பிரசாதங்களை அனுபவித்தல் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. பிரஜாவுரிமை பெறுவதற்கான சத்தியப் பிரமாணம் செய்த பின்னர் அமைச்சர் மற்றும் அமைச்சரின் செயலாளர் ஆகிய இருவரும் பத்திரத்தில் கையொப்பம் இடவேண்டும். அதற்கான பத்திரத்தில் கையொப்பம் வைத்த பின் சம்பந்தப்பட்டவர்கள் நேரடியாக வந்து கொழும்பில் பெற வேண்டும். இது தபாலில் அனுப்பப்பட மாட்டாது. ஆனால் உங்களுக்காக மீண்டும் பத்திரத்தை வவுனியாவில் வைத்து விரைவாக வழங்கத் தீர்மானித்துள்ளோம். உங்களது சிரமத்தையும், அதிக பணச் செலவு ஏற்படுவதைத் தடுக்கவும் இந்தத் திட்டத்தை நாம் செய்கின்றோம்.

குறித்த பிரஜாவுரிமை சான்றிதழ் வாழ் நாளில் ஒரு தடவை மாத்திரமே வழங்கப்படும். அதனை கவனமாக வைத்து பயன்படுத்துங்கள். மூலப் பிரதி எங்கும் கொடுக்காமல் அதன் பிரதிகளை வழங்கி உங்கள் செயற்பாடுகளை மகிழ்ச்சியாக நீங்கள் முன்னெடுக்க முடியும்.

நான் வேண்டுகோள் ஒன்றை விடுக்கின்றேன். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து இந்தியாவில் முகாம்களிலும், முகாம்களுக்கு வெளியிலும் இருப்பவர்கள் இங்கு வர வேண்டும். அவர்களும் இவ்வாறு பிரஜாவுரிமையைப் பெற முடியும். நாம் ஒரு நாட்டு மக்களாய், சகோதரமாய் இருக்க வேண்டும். நாட்டை விட்டு தற்போது எவ்வளவு பேர் வெளியேறினாலும் நாங்கள்  உங்களை வரவேற்கின்றோம். ஒரு நாடு, ஒரு மக்களாய் இருந்து இந்த நாட்டை முன்னேற்றுவோம் எனத் தெரிவித்தா

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.