76 ஆவது சுதந்திர தின விழா அக்கரைப்பற்றில்!
(எம்.ஏ.றமீஸ்)
புதிய நாடடை உருவாக்குவோம் எனும் தொனிப் பொருளின் கீழ் இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வு, அக்கரைப்பற்று மாநகர சபையின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று நீர்ப்பூங்கா வளாகத்தில் மிக கோலாகலமாக இடம்பெற்றது.
மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம்.றாபி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
தேசிய சுதந்திர தினத்திற்கு ஒத்ததாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வின்போது தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாடசாலை மாணவப் படையணிகள் பலவற்றின் அணி வகுப்பு மரியாதை இடம்பெற்றதுடன், அனைத்து இனத்தவர்களின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன.
சர்வமதத் தலைவர்களின் விஷேட பிரார்த்தனை இடம்பெற்றதுடன், முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாவின் விஷேட சுதந்திர தின உரையும் இதன்போது இடம்பெற்றது.
இந்நிகழ்வின்போது நீர்ப்பூங்கா சுற்றுவட்டாரத்தில் அனைத்து இன கலை, கலாசார, பாரம்பரிய நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பெருந்தொகையான பொதுமக்கள் இந்நிகழ்வின்போது கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது
கருத்துக்களேதுமில்லை