சுதந்திர தினத்தை முன்னிட்டு இண நல்லிணக்க செயலமர்வு

பாறுக் ஷிஹான்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிழக்கு இளைஞர்கள் அமைப்பு, சி.ஈ.வை.எஸ்.டி., ஜே.ஜே பவுண்டேசன், நிறுவனங்களின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்த இளைஞர் யுவதிகளுக்கான
இண நல்லிணக்க செயலமர்வு அமைப்பின் தலைவர் தானீஸ் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் சம்மாந்துறை சமாதான கற்கைகள் நிலையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வளவாளராக ஐ.எல்.ஹாஸிக் கலந்து சிறப்பித்தார்.

பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மட் ஹனீபா  உட்பட கௌரவ அதிதியாக சமாதான கற்கைகள் நிலையத்தில் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எல்.றியாஸூம் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் பல பிரதேசத்தைச் சேர்ந்த சிங்கள, தமிழ் முஸ்லிம் இளைஞர் யுவதிகள் கலந்து சிறப்பித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.