திறமைக்கான தேடல் விருது விழா: நாட்டின் பல்வேறு பிரதேசங்களை சேர்ந்த பலருக்கும் கௌரவமளிப்பு

மாளிகைக்காடு செய்தியாளர்

லக்ஸ்டோ நெட்வொர்க் ஸ்ரீலங்காவின் 27 ஆவது ஆண்டு நிறைவையொட்டி இடம்பெற்ற ‘திறமைக்கான தேடல் மகுடம் சூட்டும் விழா’ சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் நிறுவனத் தலைவர் ஊடகர் அறிவிப்பாளர், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் கலாநிதி ஏ.எல்.அன்சார் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் நாட்டின் நாலா பகுதிகளிலும் இருந்தும் ‘திறமைக்கான தேடல் விருதை பெறத் தகுதியான கலைஞர்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர். இதன்போது கலைஞர்களின் கலை, இலக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு உறுப்பினரும், அல் – மீஸான் பௌண்டேஷன் தவிசாளருமான யூ.எல்.என். ஹூதா உமர், ஐக்கிய தேசிய கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளர் எஸ்.எல்.எஸ். முஹீஸ், ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள், கமுஃகமுஃ மல்ஹறுஸ் ஸம்ஸ் மகா வித்தியாலய முன்னாள் அதிபர் நஸ்லின் ரிப்கா அன்சார், தொழிலதிபர் சிங்கர் எஸ்.எச்.எம். ஜிப்ரி, தொழிலதிபர் ஏ. ஆர். முகம்மது கியாஸ், லக்ஸ்டோ நெட்வேர்க் ஸ்ரீலங்காவின் அமைப்பாளர் கலாபூசனம் எம்.அருளம்பலம் உட்பட, கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கலை, கலாசார, ஊடக, சமூக சேவையில் சேவையாற்றி வரும் பல் துறை சார்ந்தவர்கள் கௌரவிக்கப்பட்ட இந்நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 50 மாணவர்களுக்கான உணவுப் பொருள்களும் தெரிவு செய்யப்பட்ட 50 பேருக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.