வேககட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்தது கார்!
வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் கடையினுல் புகுந்தது ஏ.35 பிரதான வீதியின் புதுகுடியிருப்பு பகுதியில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த கார் ஒன்று திங்கட்கிழமை மாலை 5.40 மணியலவில் விசுவமடு பகுதியில் கடை ஒன்றுக்குள் புகுந்துள்ளது.
மேற்படி கார், மோட்டார் சைக்கிள் ஒன்றை முந்தி செல்ல முற்பட்டபோது வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகிலே இருந்த கடையின் முன்பகுதியில் வாகனங்களை நிறுத்தி பொருள்கள் கொள்வனவு செய்வதற்கு வந்த வாடிக்கையாளர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள் ஒரு சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி என்பனவற்றை மோதி தள்ளி கடையினுல் புகுந்தது இவ்விபத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் எந்த வித ஆபத்தும் ஏற்படவில்லை.
இந்தச் சம்பவம் தொடர்பாக தர்மபுரம் போலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் காரின் கீழ்ப்பகுதியில் இருந்து இரண்டு மோட்டார் சைக்கிள் , சைக்கிள் என்பனவற்றை மீட்டுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை