முல்லைத்தீவு,புதுக்குடியிருப்பு பிரதேச மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்
(அஸ்ஹர் இப்றாஹிம்)
இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட கிளை ஒழுங்கு செய்திருந்த இலவச மருத்துவ முகாம்
கெருடமடு பிள்ளையார் கோயில் மண்டபத்தில் இடம்பெற்றது.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட மணல்கந்தல், வசந்தபுரம் மற்றும் கெருடமடு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இந்த மருத்துவ முகாமில் கலந்துகொண்டனர்.
மருத்துவம் சம்பந்தமான ஆலோசனைகள், உணவு பயன்பாடு, முதலுதவி, உடற் பரிசோதனைகள் மற்றும் மருத்துவ உதவிகளும் இப் பிரதேச மக்களுக்கு வழங்கப்பட்டன.
கருத்துக்களேதுமில்லை