கிளிநொச்சி ஜேர்மன் ரெக் நிறுவனதிற்கு அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த விஜயம்
கிளிநொச்சி ஜேர்மன் ரெக் நிறுவனதிற்கு அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த விஜயம் மேற்கொண்டிருந்தார்.
அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள ஜேர்மன் ரெக் நிறுவனத்தின் செயற்பாடுகளை கண்காணிக்கும் மற்றும் குறை நிறைகளுக்கு தீர்வுகாணும் நோக்குடன் குறித்த விஜயம் இடம்பெற்றது.
தொடர்ந்து, குறித்த நிறுவனத்தின் செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுக்கவும், தொழில்சார் கற்றல் செயற்பாடுகளை மேம்படுத்தும் வகையிலும் கலந்துரையாடப்பட்டது.
இந்த நிகழ்வில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன், கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்
கருத்துக்களேதுமில்லை