காக்காச்சிவட்டையில் ஏரி 378 புதிய நெல்லின அறுவடை விழா!
( வி.ரி.சகாதேவராஜா)
வெல்லாவெளி பிரதேசத்தில் உள்ள காக்காச்சிவட்டைப் பிரிவில் செய்கை பண்ணப்பட்ட ஏரி 378 புதிய நெல்லின அறுவடை விழா திங்கட்கிழமை நடைபெற்றது.
காக்காச்சிவட்டை விவசாய போதனாசிரியர் தெ.கோபி தலைமையில் அலியார்வட்டை கண்டத்தில் முன்மாதிரி துண்டமாக செய்கைபண்ணப்பட்ட புதிய நெல்லினமான ஏரி 378 இன் அறுவடை விழாவில் பிரதமஅதிதியாக உதவி விவசாய பணிப்பாளர் திருமதி நித்தியா நவரூபன் கலந்து கொண்டார்.
மற்றும் வலயத்தின் விவசாய போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், டிப்ளோமா பயிலுநர்கள், விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது புதிய நெல் இனம் சம்பந்தமான விடயங்கள், நெல் இனத்தின் இயல்புகள், விளைச்சல் பற்றியும் விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
கருத்துக்களேதுமில்லை