சட்ட விரோதம் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது
தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம் பொக்கனை கோரை மூடை பகுதியில் சட்டவிரோதமான கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் தருமபுர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 2468 போத்தல் கோடாவும் கசிப்பு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் அன்றைய தினம் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பொழுது பினையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என தருமபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை