யாழ். உடுவில் மகளிர் கல்லூரியின் இருநூறாவது ஆண்டு நிறைவு விழா!
யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரியின் இருநூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொண்டாட்ட நிகழ்வுகள் பாடசாலையில் இடம்பெற்றன.
கல்லூரி மண்டபத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணியளவில் கல்லூரியின் அதிபர் ரொசானா மதுரமதி குலேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்லூரியின் முன்னாள் அதிபர் சிரானி மில்ஸ் கலந்து கொண்டார்.
இதன்போது இருநூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கேக் வெட்டப்பட்டதுடன், இரண்டு இலட்சினைகள், மேலைத்தேயப் பாடல் தரம் 11 மாணவி தரண்ஜா கோபிநாத்தும் கர்நாடகப் பாடலை தரம் 10 மாணவி அபிகேல் டானியலும் இயற்றி இசையமைத்து வழங்கியிருந்தனர். மற்றும் கல்லூரி மாணவிகளின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
குறித்த நிகழ்வில் தென்னிந்திய திருச்சபை பேராயர் கலாநிதி வே.பத்மதயாளன், தென்னிந்திய திருச்சபை முன்னாள் பேராயர் ஜெபநேசன், கல்லூரி ஆசிரியர்கள், மாணவிகள், பழைய மாணவிகள், பெற்றோர், நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
கல்லூரியின் இலட்சினை கல்லூரி மாணவிகளான ஜோய்ஸ் பேலின் மயூரன், சாம்பவி சதீஷ் ஆகியோரால் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை