இலங்கை இராணுவ வைத்திய படையின் 10 ஆவது குழு தென்சூடானுக்கு பயணம்
இலங்கை இராணுவ வைத்திய படையணியின் 10 ஆவது குழு தென் சூடானிலுள்ள ஐக்கிய நாட்டின் தரம் – 2 வைத்தியசாலையில் கடமைகளைப் பொறுப்பேற்க செவ்வாய்க்கிழமை அதிகாலை இலங்கையில் இருந்து புறப்பட்டது.
தென் சூடானுக்குச் செல்லும் 10 ஆவது குழுவில் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டி.எம்.டி.ஜே. திசாநாயக்க ஆர்.எஸ்.பீ. யூ.எஸ்.பீ. மற்றும் 2 ஆம் கட்டளை அதிகாரி மேஜர் என்.ஐ. ரத்நாயக்க தலைமையில் 14 இராணுவ அதிகாரிகள், ஒரு கடற்படை அதிகாரி மற்றும் 49 சிப்பாய்கள் உள்ளடங்கலாக 64 இராணுவ வீரர்கள் உள்ளடங்குவர்.
இராணுவத் தளபதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை இராணுவ சுகாதார சேவைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமும் இலங்கை இராணுவ மருத்துவ படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் பீஏசி பெர்னாண்டோ யூ.எஸ்.பீ. மற்றும் வெளிநாட்டு நடவடிக்கைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஜீஎல்எஸ்டபிள்யூ லியனகே, யூஎஸ்பீ பீஎஸ்சீ, மருத்துவ சேவை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் கேஜீகேஎச் விஜேவர்தன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, இலங்கை இராணுவ மருத்துவ படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் டபிள்யூஎயூஎஸ் வனசேகர ஆர்எஸ்பீ யூஎஸ்பீ மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குழுவினரை வழியனுப்புவதில் கலந்துகொண்டனர்
கருத்துக்களேதுமில்லை