தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின்கீழ் பால் மா பக்கெட்டுக்கள் வழங்கி வைப்பு
ஹஸ்பர் ஏ.எச்.
ஜனாதிபதி செயலகம் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான பால் மா பக்கெட்டுக்கள் வழங்கி வைக்கப்பட்டன.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதியின் வழிகாட்டுதலுக்கிணங்க பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த பால் மா பக்கெட்டுக்களை பொன்டெறா நிறுவனத்தின் அனுசரணையில் வழங்கி வைக்கப்பட்டன. தம்பலகாமம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 12 கிராம சேவகர் பிரிவிலும் தெரிவுசெய்யப்பட்ட 90 குடும்பங்களுக்கு ஒருவருக்கு தலா 02 பக்கெட்டுக்கள் வீதம் மொத்தமாக 180 பக்கெட்டுக்கள் வழங்கி வைக்கப்பட்டன. மந்தபோசனையுடைய பிள்ளைகளின் போசாக்கை அதிகரிக்கும் நோக்கில் இது வழங்கி வைக்கப்பட்டன.
இதில் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப்,தம்பலகாமம் இரானுவ முகாம் மேஜர் டபிள்யூ.எம்.சீ. வன்னிநாயக்க, நிர்வாக உத்தியோகத்தர் உடகெதர உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை