சேவைநலன் பாராட்டு விழா கல்முனையில்!
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் சுமார் 15 வருடங்களாகச் சேவையாற்றி 2024.01.26ஆம் திகதி ஓய்வுபெற்ற திருமதி எஸ். ஜே.ஏ.கபூர் பிரதி அதிபருக்கான சேவை நலன் பாராட்டு விழா திங்கட்கிழமை பாடசாலை நலன்புரிக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு கௌரவ அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீம், விசேட அதிதியாக முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளரும், இஸ்லாமாபாத் முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் அதிபருமான ஓய்வு பெற்ற ஏ.சி.எம். தௌபீக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பாடசாலையின் அதிபர் ஏ.ஜி.எம். றிசாத்தின் வழிகாட்டலிலும், பாடசாலை நலன்புரிச் சங்கத் தலைவர் எம்.ரீ.ஏ.முனாப்பின் தலைமையிலும் நடைபெற்ற இந் நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்து கொண்ட திருமதி எஸ். ஜே.ஏ.கபூர் பிரதி அதிபரின் சேவைகளைப் பாராட்டி அதிபர், அதிதிகள் மற்றும் ஆசிரியர்கள் என பலரும் பேசியதுடன் பொன்னாடை போர்த்தி வாழ்த்துப் பாவுடன் பொற்கிழியும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
கருத்துக்களேதுமில்லை