முசலி, வேப்பங்குளம் லிட்டில் ரோஸ் பாலர் பாடசாலையின் விடுகை விழா!
மன்னார், முசலி, வேப்பங்குளம் லிட்டில் ரோஸ் பாலர் பாடசாலையின் விடுகைவிழா திங்கட்கிழமை பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
முசலி பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் எஸ்.எம்.எம்.பைறுஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் முசலி கோட்ட உதவிக்கல்விப் பணிப்பாளர் உவைஸ், மன்னார் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் முஜாஹிர், மன்னார் மாவட்ட மரண விசாரனை அதிகாரி நசீர், பாலர் பாடசாலைகளுக்கான இணைப்பாளர் அமீருன் நிஸா மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள், பள்ளி பரிபாலன சபைத் தலைவர்கள், நிர்வாகிகள் உட்பட ஊர்ப்பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை