பொதுப் போக்குவரத்தில் பெண்களுடன் பாலியல் சீண்டலில் ஈடுபடுவோர் கைதாவர் பிரதி பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர எச்சரிக்கை
பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தும் போது பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்முறைகளில் ஈடுபடும் நபர்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இதற்காக பெண் பொலிஸார் மற்றும் சிவில் உடையில் இரகசிய கேமரா பொருத்தப்பட்ட பொலிஸார்; அடங்கிய 234 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
கருத்துக்களேதுமில்லை