ஊடகவியலாளர்களுக்கு கிழக்கில் செயலமர்வு!

 

ஹஸ்பர் ஏ.எச்

கிழக்கு மாகாண பிரதேச தெரிவு செய்யப்பட்ட ஊடகர்களுக்கான செயலமர்வொன்று திருகோணமலையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இன்று (வியாழக்கிழமை)இடம்பெற்றது.

நாளை(வெள்ளிக்கிழமை) உட்பட இரு நாள்கள் நடை பெறவுள்ள குறித்த செயலமர்வை வெகுசன ஊடக அமைச்சு மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. இதில் வெறுப்புப் பேச்சு, தொடர்பாடல் முறை உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

முதல் நாளாகிய இன்றை தினம் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் வி.பி.கே.அனுச பல்பிட்ட கலந்து கொண்டு கருத்துரைத்தார்.

ஊடகவியாளர்களுக்கான கொள்கைகளை ஊடகவியலாளர்களே உருவாக்க வேண்டும் எதிர்காலத்தில் ஊடக பட்டய நிறுவனம் ஒன்றை உருவாக்கி தொழில்வாண்மையான ஊடகர்களை உருவாக்கவுள்ளோம் இந்த திட்டம் ஊடாக செய்தி ஆசிரியர்கள், பிரதேச ஊடகர்கள் என சுமார் 450 ஊடகர்களுக்கு பயிற்சி அளித்துள்ளோம். – என்றார்.

இதில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் மொழி தொடர்பாடல் துறை பீடத்தின் விரிவுரையாளர் கலாநிதி வி.ஜெ.நவீன் ராஜ், சட்டத்தரணி ஜகத் லியானாராய்ச்சி, சுயாதீன ஊடக வலையமைப்பின் தலைவர் சுதர்சன குணவர்தன உட்பட வெகுசன ஊடக அமைச்சின் அதிகாரிகள், பிரதேச ஊடகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.