விமான நிலையத்தின் வருகை தரும் பகுதி தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு!
கொரோனா வைரஸ் நாட்டிற்குள் பரவுவதை தடுப்பதற்காக விமான நிலையத்திற்கு வருகை தரும் பகுதியை மூடிவிட எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிச்செல்லும் பகுதி திறந்திருக்கும் என்பதுடன், இலங்கைக்கு வெளியே பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லும் விமானங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், அனைத்து இடைநிற் பயணிகள் (Passenger transit) செயற்பாடுகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
துறைமுகத்தில் அனைத்து ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கைகளும் தடையின்றி வழமை போன்று மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் நாட்டிற்குள் வருகைதருவதை தவிர்ப்பதற்கு துறைமுக அதிகார சபை பின்பற்றும் நடைமுறைகள் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும்.
கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக நாட்டில் உருவாகியிருக்கும் நிலைமைகள் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை இந்த தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை