கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கு விசேட நிதியம்

கொரோனா வைரஸ் தொற்றை வெற்றிகரமாக முகம் கொடுப்பதற்காக Covid 19 சுகாதார பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியம்’ ஒன்றை அமைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

இதன்படி கொரோன வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் முகமாக BOC – AC எண் 85737373 இல் ஒரு வங்கி கணக்கு திறக்கப்பட்டுள்ளதுடன் அதில் ஏற்கனவே 100 மில்லியன் நிதியை குறித்த நிதியம் வழங்கியுள்ளது.

மேலும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்களிடமிருந்து நிதி உதவிகளை பெற்றுக்கொள்ளும் முகமாக இந்த நிதியம் அமைக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.