பொருளாதாரத்தினை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – பசில்!
வீழ்ச்சியடைந்துள்ள தேசிய மற்றும் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்த அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம்(செவ்வாய்கிழமை) பிரதமர் தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘கொரோனா வைரஸ் தாக்கத்தத்தினால் தேசிய பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றி கொள்ளவும் கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் ‘உதேசா கம சுரகிமு’ செயற்திட்டம் ஊடாக முன்னெடுக்க வேண்டும்.
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பூகோள பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. வீழ்ச்சியடைந்துள்ள தேசிய மற்றும் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்த அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும்.
எமது நாட்டு பொருளாதார வளர்ச்சியில் கிராமிய உற்பத்திகள் பெரும்பங்காற்றுகின்றன துரிதகரமாக தேசிய உற்பத்திகளை நிலைப்படுத்த வேண்டும்.
கிராமிய வங்கி ஊடாக சுயத்தொழில் நடவடிக்கைகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அத்துடன் கிராமிய விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் எவ்வித தட்டுப்பாடுமின்றி வழங்குவது அவசியம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை