அஜித், விஜய் இப்போது கூட வாய் திறக்க மாட்டார்களா? ரசிகர்கள் கோபம்
அஜித் விஜய் இருவருமே தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர்கள். இவர்கள் நடிப்பில் வரும் படங்களுக்கு பெரிய ஓப்பனிங் இருக்கும்.
இதற்கு முக்கிய காரணம் இவர்களின் ரசிகர்கள். ஆம்,இவர்களுடைய ரசிகர்கள் ஒருவரை ஒருவர் சமூக வலைத்தளத்தில் திட்டி தீர்த்துக்கொள்வார்கள்.
அப்படியிருக்க இவர்கள் படத்திற்கு வசூல் வருகிறது ஆனால், இரு தரப்பு நடிகர்களின் ரசிகர்களுமே கொஞ்சம் வருத்ததில் தான் உள்ளனர்.
ஏனெனில் கொரோனா பாதிப்பிற்காக நடிகர் சூர்யா பேசியது பெரும் வைரல், ஆனால் விஜய் அஜித் இதை செய்யாதது எல்லோருக்குமே கொஞ்சம் வருத்தம் தான்.
அதோடு அஜித், விஜய் இருவருக்கும் இது தேவையில்லை என்றாலும், அவர்களுக்காக எதையும் செய்ய துணிவிருக்கும் ரசிகர்கள் சிலராவது இவர்கள் பேச்சை கேட்டு மாறினால் கூட சந்தோஷம் தானே..
கருத்துக்களேதுமில்லை