COVID-19 பற்றி விவாதிக்க அமைச்சரவை கூடியது!
நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்பான அச்சநிலை காணப்படும் நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றது.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று (புதன்கிழமை) காலை 10:30 க்கு அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த கூட்டத்தின் பின்னர் கருத்து தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன, “ஊரடங்கு நேரத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பது தொடர்ப்பன இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது விவாதிக்கப்பட்டது” என கூறினார்.
கருத்துக்களேதுமில்லை