மட்டக்களப்பில் சுகாதார விதிமுறைகளுடன் மக்கள் பொருட் கொள்வனவு!
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதையடுத்து பல்வேறு பகுதிகளிலும் மக்கள் இன்று காலை பொருட்கொள்வனவில் ஈடுபட்டனர்.
சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய பல பகுதிகளில் மக்கள் தமக்கான பொருட்களைக் கொள்வனவு செய்துவந்த அதேவேளை சில இடங்களில் சுகாதார அறிவுறுத்தல்கள் மீறப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாநகரசபையின் பொதுச்சந்தையில் மக்கள் ஒன்றுகூடுவதைத் தடுப்பதற்காக லேடிமனிங் வீதியில் விசேட சந்தைத் தொடர் அமைக்கப்பட்டு மக்கள் தமக்கான இடைவெளிகளைப் பேணி பொருட்கொள்வனவினை மேற்கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன.
இதேபோன்று, மட்டக்களப்பு கள்ளியங்காட்டில் சதோச கிளையொன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் திறந்துவைக்கப்பட்டு அதில் மக்களுக்கான பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன.
அத்தியவசியப் பொருட்களை பொதுமக்கள் தடையின்றி பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
கருத்துக்களேதுமில்லை