தொங்குவது போலிருக்கும் மார்பகங்களை, ஃபிட்டாக்க இந்த மசாஜ் ட்ரை பண்ணுங்க!
எடுப்பான மார்பகங்களை எப்போதும் தக்கவைத்துகொள்ள வேண்டும் என்று பெண்கள் விரும்புவார்கள். ஆனால் வயது அதிகமாகும் போது மார்பகங்களில் தளர்வும் இயல்பாகிறது. சரியான நேரத்தில் உரிய காலத்தில் சற்று கவனம் செலுத்தினாலே போதுமானது. மார்பகங்கள் பராமரிப்பு சற்று தவறும் போது அதில் தொய்வு உண்டாகிறது. பெண்கள் மார்பகங்கள் சற்று தளர்ந்தாலும் கூட அதிக கவலைப்படுவதுண்டு. இது குறித்து வெளியில் பேசுவதற்கு தயங்கினாலும் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் பெண்களின் சதவீதம் அதிகமே. தற்போது இளம்பெண்களுக்கு கூட மார்பகங்களில் தொய்வு உண்டாகிறது. மார்பகங்களை தொய்விலிருந்து காப்பாற்ற வீட்டிலிருந்து செய்ய கூடிய விஷயங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.நிச்சயம் உதவியாக இருக்கும்.
மார்பகம் தளர காரணம்
முதலில் மார்பகத்தில் தொய்வு ஏற்படும் காரணத்தை தெரிந்துகொண்டால் அதை தவிர்க்க இயலும். சருமத்தை இறுக்கமாக வைத்திருக்கும் கொலாஜன் உற்பத்தி குறையும் போது சருமம் தளர்ச்சிக்கு உண்டாகிறது. அதில் மார்பக தளர்ச்சியும் இயல்பாகிறது.சில பெண்களுக்கு உடலில் ஹார்மோன் சுரப்பில் மாற்றங்கள் உண்டாவது இயல்பு. அதில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைபாடு நேரும் போதும் மார்பகங்களில் தொய்வுகள் உண்டாக வாய்ப்புண்டு.
உள்ளாடை அணியும் போது பொருத்தமில்லாததை தேர்வு செய்யும் போதும் மார்பகத்தை காட்டிலும் பெரிய அளவிலானதை அணியும் போதும் மார்பகத்தில் தொய்வு வர வாய்ப்புண்டு. இன்னும் சிலர் உள்ளடை அணிவதை தவிர்ப்பார்கள். இவர்களுக்கும் மார்பகங்களில் தொய்வு உண்டாகும்.இவை தவிர இரண்டுக்கு மேற்பட்ட குழந்தைகள் பெறும் போதும் மார்பகங்களில் கர்ப்பக்காலங்களில் உண்டாகும் மாற்றங்களால் மார்பக தொய்வு கூடுதலாக வயது குறையும் போதே உண்டாகும்.
சில பெண்கள் அதிக உடல் எடையில் இருந்து வேகமாக உடல் எடையை குறைக்க முயற்சி செய்யும் போதும் மார்பகத்தில் தொய்வு உண்டாகும். இது குறித்து இன்னும் விளக்கமாக பார்க்கலாம். இப்போது மார்பக தொய்வுக்கு என்ன செய்வது என்பதை குறித்து தெரிந்துகொள்வோம்.
ஐஸ் க்யூப் மசாஜ்
ஐஸ் க்யூப் நமது சருமத்தை தளர்ச்சியுறாமல் பாதுகாக்கிறது. முகத்தில் வயதின் முதிர்ச்சி தெரியாமல் இருக்கவும் கன்னம் தாடை பகுதிகளில் சதைகள் தளர்வாக இருந்தால் அதை சரி செய்யவும் ஐஸ்க்யூப் மசாஜ் செய்வதுண்டு. மார்பகத்தில் தொய்வு கண்டால் இரண்டு நாளைக்கு ஒரு முறை ஐஸ்க்யூப் மசாஜ் செய்யலாம். தொடர்ந்து 15 நிமிடங்கள் இந்த மசாஜ் செய்யும் போது ஒரே மாதத்தில் மார்பகங்கள் தளர்ச்சி நீங்கி மார்பகம் எடுப்பாவதை காணமுடியும்.
சருமத்தில் குளிர்ந்த ஐஸ்கட்டி படும் போது மார்பகத்திசுக்களை சுருங்க செய்யும். காலை நேரங்களில் இதை செய்து வர வேண்டும். இளம்பெண்கள் மாதம் இருமுறை செய்துவந்தால் மார்பகத்தை அழகாக பராமரிக்கலாம்.
ஆலிவ் ஆயில் மசாஜ்
இரவு நேரங்களில் தூங்க செல்வதற்கு முன்பு ஆலிவ் ஆயிலை இலேசாக சூடு செய்து மார்பகங்களில் அதை சுற்றியுள்ள பகுதியிலும் 15 நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும். தினமுமே இதை செய்துவந்துவந்தால் ஆலிவ் எண்ணெயில் இருக்கும் வைட்டமின் இ ஆனது மார்பகத்திசுக்களில் இருக்கும் செல்களை உயிர்ப்பிக்கிறது. இதனால் மார்பகங்கள் கவர்ச்சியை பெறுவதோடு அழகிய வடிவத்தையும் பெறுகிறது. தொடர்ந்து ஒரு மாதம் மசாஜ் செய்தால் விரும்பிய மார்பக அழகை பெற்றுவிடலாம்.
மார்பகத்துக்கு பேக்
முகத்தில் இருக்கும் அழுக்குகளையும், கரும்புள்ளிகளையும் நீக்குவதற்காக மட்டும் ஃபேஸ் பேக் போடுவதில்லை. முகத்தின் சருமங்கள் தளர்ந்துவிடாமல் இருக்கவும் தான் ஃபேஸ் பேக் பொடுகிறோம். அந்த தளர்வை மார்பகங்கள் பெறாமல் இருக்கவும் மார்பகத்துக்கு பேக் போடுவது உண்டு.
வெள்ளரிக்காயை தோல் , விதைகளை நீக்கி மிக்ஸியில் மசித்து அதனுடன் முட்டையின் வெள்ளைக்கருவை சேர்க்க வேண்டும். முட்டையை எக் பீட்டரில் நன்றாக அடித்தால் நுரை வரும். அல்லதுஸ்பூனை கொண்டு அடித்து கலக்கி பிறகு வெள்ளரிக்காய் மசித்த விழுதில் சேர்த்து மார்பகங்களை சுற்றி பேக் போடுங்கள்.
20 நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள். மார்பகங்கள் தளர்ந்து இருப்பவர்கள் வாரம் ஒரு முறை இதை செய்து வந்தால் சருமத்தின் தளர்ச்சி குறையும். பொதுவாக இளம்பெண்களும் மாதம் ஒரு முறை இதை செய்துவந்தால் எப்போதும் சிக்கென்ற எடுப்பான மார்பகத்துடன் வளைய வரலாம்.
வெந்தயம்
வெந்தயம் மருத்துவகுணங்களை கொண்டிருப்பதும் அழகு குறிப்பில் பயன்படுத்தப்ப டுவதும் தெரியும். ஆனால் இவை மார்பகத்தின் தளர்வை போக்கும் என்பது தெரியுமா? உண்மை வெந்தயத்தில் இருக்கும் அதிகப்படியான வைட்டமின்களும், ஆன் டி ஆக்சிடண்ட்களும் சருமத்துக்குள் ஊடுருவி சருமத்தை இறுக்கமாக வைத்திருக்கும். வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து பயன்படுத்துவது சிறந்த பலன் அளிக்கும்.
முடியாதவர்கள் வெந்தயத்தை வறுத்து பொடித்து வைத்துகொள்ளுங்கள். வாரம் ஒருமுறை வெந்தயத்தை பாலில் குழைத்து பேஸ்ட் போல் ஆக்கி மார்பிலும் மார்பகத்தை சுற்றியுள்ள பகுதியிலும் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்யுங்கள். 20 நிமிடங்கள் கழித்து மிதமான நீரில் கழுவி விடுங்கள். மார்பகம் தளர்வோடு மார்பக அழகும் கூடுவதை பார்க்கலாம்.
முட்டை, தயிர்
எளிய பயிற்சி இது. முட்டையின் வெள்ளைகரு மற்றும் யோகர்ட் சேர்த்து நன்றாக நுரைக்கும் வரை அடித்து பிறகு மார்பகத்தை சுற்றி தடவி மசாஜ் செய்ய வேண்டும். மார்பகத்தில் மசாஜ் செய்யும் போது நாற்காலியில் அல்லது படுக்கையில் இருந்து செய்ய வேண்டும். வட்ட வடிவில் மசாஜ் செய்யுங்கள். அதே போன்று எந்த பொருளை கொண்டு மசாஜ் செய்தாலும் கீழிருந்து மேல் நோக்கி மசாஜ் செய்ய வேண்டும்.
தெரிந்துகொள்ளுங்கள்
வெறும் பராமரிப்பால் மட்டுமே மார்பகங்களை தளராமல் செய்ய முடியாது. தாய்ப்பால் கொடுத்தால் மார்பகங்களில் தளர்வு உண்டாகும் என்னும் தவறான கருத்து நிலவி வருகிறது. இது குறித்து ஆய்வுகள் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உடல் எடை சீராக இருந்தாலே மார்பகங்கள் தளராது. அதனால் உடல் எடை அதிகரிக்கும் போது அதை குறைக்கும் போது கவனம் இருக்கட்டும்.
வேலை நேரங்களில் உள்ளாடையும் ஓய்வு பொழுதில் தேவையில்லை என்பதும் கூட மார்பகத்தில் தொய்வை உண்டாக்கிவிட வாய்ப்புண்டு என்பதால் இதிலும் கவனம் செலுத்துங்கள்.நீங்கள் புகைப்பிடிப்பவராக இருந்தால் அவை சீக்கிரமே உங்கள் வயதை அதிகப்படுத்தி காண்பிக்கும். சருமத்தை மிருதுவாக்கும் எலாஸ்டினை அழிக்கிறது.
மார்பகங்கள் தளராமல் இருக்கவும். அப்படி தளர்ந்த மார்பகங்களை சரிசெய்யவும் வீட்டிலேயே செய்ய வேண்டிய இந்த எளிய வழிமுறைகள் மட்டுமே போதுமானது. ஆனால் தொடர்ந்து செய்தால் பலனும் விரைவாக கிடைக்கும்.
கருத்துக்களேதுமில்லை