கொரோனா வைரஸினால் உயிரிழந்த முதலாவது இலங்கையரின் உடல் தகனம்
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்த முதலாவது இலங்கை பிரஜையின் உடல் சற்றுமுன்னர் கொட்டிகாவத்தை மயானத்தில் கடும் பாதுகாப்பு மற்றும் சர்வதேச சுகாதார விவரக்குறிப்புகளின் கீழ் தகனம் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகி அங்கொடை ஐ.டி.எச். வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவரே நேற்று (சனிக்கிழமை) உயிரிழந்தார்.
மாரவில பகுதியை சேர்ந்த 60 வயதுடைய குறித்த நபர் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை