ஓய்வூதியம் எதிர்வரும் 2 மற்றும் 3ஆம் திகதிகளில் வழங்கப்படவுள்ளதாக அறிவிப்பு!

ஓய்வூதியம் எதிர்வரும் 2 மற்றும் 3ஆம் திகதிகளில் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி விசேட செயலணி நேற்று(ஞாயிற்றுக்கிழமை) எடுத்த தீர்மானத்திற்கமையவே குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

குறித்த நாட்களில் பெற முடியாதவர்கள் எதிர்வரும் 6ஆம் திகதி ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு வழிமுறைகளில் ஓய்வூதியம் வழங்கப்படவுள்ளது. இதற்கமைய தபாலினூடாகவும் வங்கிக் கணக்குகள் வாயிலாகவும் ஓய்வூதியத்தை பயனாளிகளிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.