டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான புதிய நாள் குறித்த அறிவிப்பு வெளியானது!
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான புதிய நாள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2020 டோக்கியோ ஒலிம்பிக் சம்மேளன தலைவர் யோஷிஹிரோ மோரி மற்றும் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளன தலைவர் தோமஸ் பாஹ் இடையே தொலைபேசி உரையாடல் இடம்பெற்றது.
அதன்படி, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளானது 2021ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதி தொடங்கி ஓகஸ்ட் 8ஆம் திகதி நிறைவடைகிறது.
பராலிம்பிக்ஸ் ஆகஸ்ட் 23 தொடக்கம் செப்டெம்பர் 2 வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை