எனது 18 வயதில் நடக்க கூடாத சம்பவம் நடந்தது..! நடிகை கங்கனா ரனாவத் வாழ்க்கையில் நடந்த உண்மை, அவரே கூறியது
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை கங்கனா ரனாவத்.
இவர் தற்போது தமிழில் ஏ.எல். விஜய் இயக்கத்தில் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து வருகிறார்.
ஆனால் இவர் முதன் முதலில் தமிழில் அறிமுகமான படம் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த தாம் தூம் எனும் படத்தில் தான்.
இந்நிலையில் தனது வாழ்க்கையில் நடந்த சில கசப்பான சம்பவங்களை பற்றி மனம் திறந்த தன் ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவர் கூறியது “எனக்கு 16 வயது இருக்கும் அப்போது நான் எனது வீட்டை விட்டு ஓடினேன். சினிமாவில் நடிக்க ஆரம்பித்தேன். அப்படி நடிக்க ஆரம்பித்த 2 ஆண்டுகளுக்குள் அந்த கசப்பான சம்பவம் என் வாழ்வில் நடக்க துவங்கியது”.
மேலும் “ஆம் நான் எனது 18ஆம் வயதில் நான் போதைக்கு அடிமையானேன். அப்போது என் வாழ்க்கை நன்றாக இல்லை, என்னுடன் இருந்த சிலரிடம் இருந்து மரணம் மட்டுமே என்னை காப்பாற்ற முடியும் என கூட நினைத்தேன் என்று வெளிப்படையாக கூறினார்”.
கருத்துக்களேதுமில்லை