கொரோனா – இங்கிலாந்து கிரிக்கட் சபை நிதியுதவி
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவுவதற்காக இங்கிலாந்து கிரிக்கட் சபை நிதியுதவி தொகையை அறிவித்துள்ளது.
இங்கிலாந்து கிரிக்கட் சபையின் தலைமை நிர்வாகி டொம் ஹெரிஷன் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய, இங்கிலாந்தின் அனைத்து வகையான கிரிக்கட்டுக்காக 61 மில்லியன் பவுண்ஸ் பெறுமதியான நிதி உதவி தொகையை அவர் அறிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற இங்கிலாந்து கிரிக்கட் சபையின் கூட்டத்தில் இந்த நிதி உதவிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை