தினமும் உடலுறவில் ஈடுபடலாமா? அது ஆரோக்கியமா? ஆபத்தா? தெரிஞ்சிக்கோங்க…

எல்லா உயிரினங்களும் தோன்றுவதற்கு இனப்பெருக்கம் என்பது ஒரு முக்கியமான அம்சமாக இருக்கிறது. ஆணும் பெண்ணும் காதலுடன் இணைந்து செயல்பட செக்ஸ் அவசியம். செக்ஸ் என்ற உணர்வு எல்லா உயிர்களிலும் இயற்கையாகவே தூண்டக் கூடியது. இதற்காக சுரக்கப்படும் செக்ஸ் ஹார்மோன்களால் நமக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். செக்ஸ் ஹார்மோன் ஒரு மகிழ்ச்சி ஹார்மோன். செக்ஸ் உணர்வு ஏற்பட்டாலே மூளையில் ஏற்படும் படபடப்பு, பயம் எல்லாம் போய் விடுமாம்.

​உடலுறவு

samayam tamil

மன அழுத்தத்திற்கு நிவாரணம் அளிப்பதில் இருந்து உங்களுக்கும் உங்க துணைக்கும் இணக்கத்தை ஏற்படுத்தும் வரை செக்ஸ் உதவுகிறது. கலோரிகளை எரிக்க உதவுகிறது. செக்ஸின் போது சுரக்கும் ஆக்ஸிடோசின் என்ற ஹார்மோன் தான் உலகின் தலைசிறந்த வலி நிவாரணி என்கிறார்கள் பாலியல் மருத்துவர்கள். உடம்பில் ஏற்படும் அயர்ச்சியை போக்கி ரிலாக்ஸை தருகிறது. செக்ஸ் முதுமையில் நோய் வருவதை தடுக்கிறது, நீண்ட ஆயுளைக் தருகிறது, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது போன்ற ஏராளமான நன்மைகளை அள்ளித் தருகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். இது போன்று இன்னும் செக்ஸால் ஏற்படும் நன்மைகளை பற்றி கீழ்க்கண்டவாறு காணலாம்.

​உணர்வுப்பூர்வமான நெருக்கம்

samayam tamil

செக்ஸ் இரண்டு பேருக்கு இடையே உடல் நெருக்கத்தை மட்டும் கொடுப்பதில்லை உணர்வுப் பிணைப்பையும் வலுப்படுத்த உதவுகிறது. உங்களுக்கு உங்க துணைக்கும் இடையேயான உறவு வலுவாக இருக்க வேண்டும் என்றால் அடிக்கடி செக்ஸ் வைத்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள் பாலியல் மருத்துவர்கள். எனவே துணைக்களுக்கிடையே உணர்ச்சி நெருக்கத்தை ஏற்படுத்த செக்ஸ் ஒரு சிறந்த உணர்வாகும்.

தம்பதிகள் ஒருவருக்கொருவர் உணர்வுப்பூர்வமாக இணைகின்ற பொழுது தான் இல்லறம் இனிமை பெறும். இருவருக்கும் இடையே எந்தவித இடைஞ்சல்கள், மன வருத்தங்கள் இன்றி தாம்பத்தியம் சிறப்புற வாழ முடியும்.

​இதய ஆரோக்கியம்

samayam tamil

சமீபத்திய ஆய்வின் படி வாரத்திற்கு இரண்டு முறைக்கு மேல் செக்ஸ் வைத்து கொள்ளும் ஆண்களுக்கு மாரடைப்பு வருவது குறைவு என்கிறார்கள் மருத்துவர்கள். ஒரு மாதத்திற்கு ஒரு முறை செக்ஸ் வைத்துக் கொள்ளும் ஆண்களை காட்டிலும் இவர்களுக்கு மாரடைப்பு வருவது குறைவு என்கிறது ஆய்வு. அடிக்கடி செக்ஸ் வைத்துக் கொள்ளும் போது ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்களின் அளவு சீராக்கப்பட்டு இதய ஆரோக்கியம் மேம்படுகிறதாம். மேலும் பெண்களுக்கு எலும்பு சம்பந்தமான ஆஸ்டியோபோரோசிஸ் நோய்கள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் வருவதும் குறைகிறது.

நோயெதிப்பு சக்தியை அதிகரிக்கிறது

samayam tamil

அடிக்கடி செக்ஸ் வைத்துக் கொள்ளும் தம்பதிகளுக்கு நோயெதிப்பு சக்தியை அதிகரிக்கும் இம்பியூன்ளோபூலின் ஏ என்ற ஆன்டி பாடிகள் அதிகரிக்கின்றனவாம். இதன் மூலம் உங்களுக்கு வரும் காய்ச்சல், சளித் தொல்லையிலிருந்து காக்கிறது.

மன அழுத்தத்தை போக்கும் மாமருந்து

மன அழுத்தத்தில் இருக்கும் உங்க துணையை சமாளிக்க செக்ஸ் ஒரு சிறந்த கருவியாக செயல்படும். தம்பதிகளின் மன அழுத்தத்தை குறைக்க செக்ஸ் பயன்படுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். இதற்கு காரணம் ஆக்ஸிடோசின் என்ற சந்தோஷ ஹார்மோன் தான். இந்த ஹார்மோன் தான் காதல், காம உணர்விற்கு காரணமாக அமைகிறது. எனவே இந்த ஹார்மோன் சுரக்கும் போது மன அழுத்தம் நீங்கி மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.

​வலியை போக்கும் வலி நிவாரணி

samayam tamil

செக்ஸ் உணர்வின் போது ஆக்ஸிடோசின் மற்றும் எண்டோர்பின் போன்ற வலியை குறைக்கும் ஹார்மோன் 5 மடங்காக சுரக்கின்றன. இவை உங்க உடம்பு வலியை போக்கி உற்சாகமாக்கி விடுமாம். எனவே செக்ஸ் ஒரு சிறந்த வலி நிவாரணியாக செயல்படுகிறது.

ஆயுட்காலத்தை நீடிக்கும் வரம்

செக்ஸ் மனிதனின் ஆயுட் காலத்தை நீடிக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். செக்ஸின் போது சுரக்கும் டிஹைட்ரோஎபியன்ட்ரோஸ்ட்ரன் என்ற ஹார்மோன் நோயெதிப்பு சக்தியை அதிகரித்தல், பாதிக்கப்பட்ட திசுக்களை சரி செய்தல், சரும ஆரோக்கியம் போன்ற வேலைகளை செய்கிறது. எனவே வாரத்திற்கு இரண்டு முறை செக்ஸ் வைத்துக் கொள்ளும் துணைகள் நீண்ட ஆயுளோடு இளமையாகவும் வாழ்கின்றனராம்.

இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது

samayam tamil

பொதுவாக மனிதனின் இதயத் துடிப்பு அதிகமாகும் போது இரத்த ஓட்டமும் அதிகமாகிறது. எனவே செக்ஸின் போது இதயத் துடிப்பு அதிகரித்து எல்லா உறுப்புகளுக்கும் செல்களுக்கும் இரத்த ஓட்டம் அதிகமாகிறது. இதனால் உடம்பில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேற்றப்படுகிறது.

நல்ல தூக்கத்தை தரும் தூக்கமருந்து

செக்ஸ் செய்யும் தம்பதிகள் நிம்மதியான தூக்கத்தை பெற முடியுமாம். எனவே அடிக்கடி செக்ஸ் வைத்துக் கொள்வது உங்க தூக்க சுழற்சியை சீராக்ி இரவில் நிம்மதியான தூக்கத்தை பெற உதவுகிறது.

​ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம்

samayam tamil

நிறைய பேர் உடல் எடையை குறைக்க ஜிம்மிற்கு நடையா நடப்பார்கள். ஆனால் அதெல்லாம் தேவையில்லையாம் அடிக்கடி செக்ஸ் வைத்துக் கொள்வது உங்க கலோரிகளை எரித்து உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. நீங்கள் அரை மணி நேரம் செக்ஸ் வைத்தாலே 80 கலோரிகள் வரை எரிக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். அப்போ தினசரி என்றால் பார்த்துக்கோங்க

ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிப்பு

செக்ஸின் போது ஆண் ஹார்மோன் ஆன டெஸ்டோஸ்டிரோன் மற்றும் பெண் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிக்கிறது. இது உங்க தசைகள் மற்றும் எலும்பிற்கு வலிமையை தருகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் தான் பெண்ணிற்கு உடல் வாசனையை கொடுக்கிறது.

​மூளைச் சோர்வை போக்குதல்

samayam tamil

செக்ஸின் போது சுரக்கும் சந்தோஷ ஹார்மோன் மனச் சோர்வை போக்குகிறது. இது செரோடோனின் என்ற கெமிக்கலை உற்பத்தி செய்கிறது. இது ஒரு மனச்சோர்வு எதிர்ப்பு மருந்தாக மூளைக்கு செயல்படுகிறது. எனவே மனச்சோர்வில் இருப்பவர்களுக்கு செக்ஸ் சிறந்த நிவாரணம் அளிக்கக் கூடியது.

நாள் முழுவதும் குதூகலம் உண்டாதல்

காலையிலயே செக்ஸ் வைத்துக் கொள்பவர்களுக்கு அந்த நாள் குதூகலமாக இருக்கும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இது உடனே மன அழுத்தத்தை போக்கி நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க உதவுகிறதாம். எனவே அந்த நாளை புன்னகையுடன் கடக்க விரும்பினால் செக்ஸ் உங்களுக்கு ஒரு நல்ல திறவுகோல். துணைகள் இருவரும் உற்சாகமாக குதூகலிக்க செக்ஸ் அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.