வவுனியாவில் தினக் கூலித் தொழிலாளர்களுக்கு V4U அமைப்பின் விசேட வேலைத்திட்டம்…

வவுனியா மாவட்டத்தில் உள்ள தினக் கூலித்தொழிலாளர்கள் வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியாது மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளனர். அத்துடன் எதிர்வரும் மாதங்களில் ஏற்பட இருக்கும் உணவு தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் முகமாவும் வவுனியா மாவட்டத்தில் உள்ள தினக் கூலித்தொழிலாளர்கள் தங்களுடைய வீட்டில் இருந்து வருமானத்தை பெற்றுக்கொள்ள கூடிய சந்தர்ப்பம் ஒன்றினை V4U அமைப்பினர் (பொறியியலாளர்கள் மற்றும் வைத்தியர்களை உள்ளடக்கிய அமைப்பு) ஆரம்பித்துள்ளனர்.

தினக் கூலித்தொழிலாளர்கள் தங்களது வீட்டுடன் இருக்கும் காணிகளில் பயிர்செய்வதற்கு தேவையான விதைகளை அவர்கள் வழங்குவார்கள். அத்துடன் ஒரு நாளைக்கு 500 ரூபா அடிப்படையில் வாரத்துக்கு 4 நாட்கள் எனும் ரீதியில் 2 வாரத்துக்கு உங்களுடைய காணிகளில் நீங்கள் பயிர்செய்வதற்கு உங்களுக்கு சம்பளம் தருவார்கள்.

இரண்டாம் வாரமளவில் அவர்களுடைய தன்னார்வ தொண்டர்கள் உங்களுடைய காணியினை பார்வையிட்டு நீங்கள் சிறப்பாக பயிர்செய்தால் உங்களுடைய அறுவடையினை விற்பனையின் போதான கொள்வனவு விலையில் கொள்வனவு செய்வதற்குரிய உத்தரவாதத்தினை தந்து உங்களுக்கு தேவையெனின் முற்பணத்தினையும் வழங்குவர். நீங்கள் சிறப்பாக பயிர் செய்யாது விடின் 2ஆம் வாரத்தின் பின்னர் எதனையும் வழங்க மாட்டார்கள்.

நேரடியாக அவர்களை(V4U) தொடர்பு கொள்ள 0776970294 எனும் இலக்கத்தை அழைக்கவும்.

அல்லது எமது துரித எண் 0242225511 அழைத்து தங்களை தகவல்களை வழங்க முடியும். இத் திட்டத்தில் இணைத்துக் கொள்வதற்காக தகவல்கள் V4U அமைப்பினருக்கு வழங்கப்படும்.

தகவல்:மாவட்ட உதவி ஆணையாளர்,

கமநல அபிவிருத்தி திணைக்களம்,

வவுனியா

(0242225511 )

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.