கிளிநொச்சி இரணைமடு விமானபடை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 172 பேர் இன்று வீடு திரும்பினர்…

கிளிநொச்சி இரணைமடு விமானபடை முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 172 பேர் இன்று வீடு திரும்பினர். கடந்த 21ம் திகதி இந்தியாவிற்கு சுற்றுலா சென்று நாடு திரும்பியவர்களே இவ்வாறு இரணைமடு விமானப்படை முகாமில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். அவர்கள் குறித்த முகாமிற்கு அழைத்து வரப்பட்டு 14 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இன்று பரிசோதனைகள் இடம்பெற்றதை அடுத்து விசேட பாதுகாப்பு மற்றும் வாகன வசதிகளுடன் அவ்வந்த பிரதேசங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
குறித்த 172 பேரில் ஒரு மதகுரு அடங்கலாக 45ஆண்களும், 147 பெண்களும் அடங்குகின்றனர். இவர்கள் இன்று பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதை அடுத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குறித்த நிகழ்வு இன்று காலை 8 மணியளவில் இரணைமடு விமானப்படை முகாமில் இடம்பெற்றது.
குறித்த அனைவரும் இந்தியாவில் கௌதம புத்தர் பிறந்த இடத்தினை பார்வையிட்டு வழிபடுவதற்காக சுற்றுலா பயணிகளாக சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முகாமில் தங்கியிருந்தவர்கள் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில்,
தம்மை சிறந்த முறையில் பார்த்ததாகவும், தாங்கள் வீடுகளில் இருந்தது போலவே இங்கு இருந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.