சிவாஜி படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க மறுத்த பிரபல நடிகர்.. முன்னாடி நடந்த சண்டைதான் காரணம்
ரஜினி நடிப்பில் உருவாகியிருந்த சிவாஜி படத்தின் வெற்றியைப் பற்றி நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற அந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியிருந்தார். ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்.
நடைமுறைக்கு அப்பாற்பட்ட விஷயங்களாக இருந்தாலும் ரஜினி நடித்தால் எல்லாம் சாத்தியமே என்பதை பொருட்டு இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டிருந்தது. இதற்கு ரஜினி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றது.
சிவாஜி படத்தில் ரஜினிக்கு நிகரான கதாபாத்திரத்தில் நடித்து பெயர் பெற்றவர் சுமன். ஆதிகேசவன் என்றால் பொட்டு வச்சிட்டு பொங்கல் சாப்பிடுவேன் நினைச்சியா என்ற டயலாக் இன்றும் தனித்துவம் வாய்ந்தது.
ஆனால் அந்த கதாபாத்திரத்தில் முதன்முதலில் நடிகர் நடிகர் சத்யராஜிடம் தான் கேட்கப்பட்டது.
சத்யராஜ்கும் ரஜினிக்கும் ஏற்கனவே நேரடியாக பல பிரச்சனைகள் உள்ளது. அதுமட்டுமல்லாமல் காவிரி பிரச்சனையின் போது கர்நாடகாவை எதிர்த்து சத்தியராஜ் கொந்தளித்திருந்தார். அதில் கர்நாடக அரசு டேமேஜ் ஆனதோ இல்லையோ ரஜினி மிகவும் டேமேஜ் செய்யப்பட்டார்.
மேலும் தமிழகத்தை ஒரு தமிழன் தான் ஆள வேண்டும் என்கிற கருத்து தற்போது வரை சத்யராஜிடம் இருந்து வருகிறது. இதன் காரணமாகவே சத்யராஜ் சிவாஜி படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் வேண்டாம் என ஒதுக்கி விட்டாராம்.
இருந்தாலும் சத்யராஜின் நக்கல் நையாண்டி நடிப்பிற்கு அந்த கேரக்டர் வேற லெவல் வரவேற்பை பெற்றிருக்கும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
கருத்துக்களேதுமில்லை