தண்ணி அடிக்கும் ஆண்கள் இத செஞ்சா போதும்.. தண்ணி அடிச்சதே தெரியாதாம்…
நீங்கள் ஒரு செலிபிரிட்டியாக இருந்தாலோ அல்லது ஒரு நண்பராக இருந்தாலோ நிறைய பார்ட்டிகளுக்கு போக வேண்டியதிருக்கும். ஆண்கள் பொதுவாக இந்த பார்ட்டி கொண்டாட்டங்களின் போது குடிக்காமல் இருக்க முடியாது. 2 பெக்காவது அடிக்காமல் வர முடியாது. ஆனால் அதுவல்ல பிரச்சனை.
போதை தலைக்கேறிய பிறகு என்னாகும்? மல்லாக்க படுத்து தூங்க ஆரம்பித்து விடுவீர்கள். சுய நினைவிலேயே இருக்க மாட்டீர்கள், முகம் எல்லாம் சோர்வு மயக்கம் தென்படும். உடல் முழுவதும் மது வாடை வீசும். முகம் வீங்கி காணப்படும், தூக்க கண்கள் தென்படும். கொஞ்சம் யோசித்து பாருங்கள் காலையில் எழுந்ததும் ஒரு இண்டர்வியூ அல்லது ஒரு முக்கியமான நபரை காணப் போகிறீர்கள் அல்லது உங்க மனைவி ஊரிலிருந்து வர்றாங்க அவங்களை இப்படியே இந்த ஹேங்ஓவர் முகத்துடனா பார்க்க போகிறீர்கள். கண்டிப்பாக நிலைமை மோசமாகி விடும். இப்படியே போனால் நல்லா இருக்காது அல்லவா?
அதனால் தான் நாங்கள் உங்களுக்கு சில டிப்ஸ்களை வழங்குகிறோம். உங்க முகம் சட்டென்று புத்துணர்ச்சியாக மாற இந்த 5 விஷயங்களை செய்தாலே போதும் குடித்ததாக உங்களை யாரும் சந்தேகப்பட முடியாது. சரி வாங்க அது என்னென்ன என்று பார்ப்போம்.
நிறைய தண்ணீர் குடியுங்கள்
முதலில் நீங்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். நீங்கள் மது அருந்துவதற்கு முன்பும் இடையிலும் நிறைய தண்ணீர் அருந்த வேண்டும். இப்படி செய்யும் போது உங்கள் போதையை இது குறைக்கும். எனவே குடித்து விட்டு காலையில் எழுந்திருக்கும் போது 2-3 டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும். மது பழக்கம் உங்க உடலுக்கு நச்சுத்தன்மையை விளைவிக்கிறது. இதுவே நீங்கள் தண்ணீர் அருந்தும் போது நச்சுக்கள் வெளியேற்றப்படுகின்றன. இப்படி நீர் அருந்துவது உங்க வயிற்றுக்கு பாதுகாப்பாக இருப்பதோடு சருமத்தையும் புதுப்பிக்க உதவுகிறது.
குளியுங்கள்
நீங்கள் ஹேங்ஓவர் நிலையில் இருந்தால் உங்களுக்கு புத்துணர்ச்சி தர ஷவரில் ஒரு குளியல் போடலாம். அதிலும் வெதுவெதுப்பான நீர் என்றால் இரத்த ஓட்டம் அதிகமாகி உடம்பிற்கு ஒரு ஆற்றல் கிடைக்கும். எனவே இப்படி குளிப்பதால் உங்க போதை நிலையை மாற்றி புத்துணர்வுடன் செயல்படலாம்.
முகத்திற்கு மசாஜ் கொடுங்கள்
ஹேங்ஓவருக்கு பிறகு முகமெல்லாம் வீங்கி போய் இருக்கும். உங்க பெற்றோரோ அல்லது மனைவியோ உங்க முகத்தை பார்த்தால் கண்டறிந்து விடுவார்கள். எனவே காலையில் எழுந்ததும் உங்க முகத்திற்கு மசாஜ் செய்ய வேண்டும். இந்த உடற்பயிற்சி உங்க வீங்கிய முகத்தை மறைத்து உங்க குடிப்பழக்கத்தை மற்றவர்களிடம் வெளிக் காட்டாமல் இருக்க உதவும். முகத்திற்கு மசாஜ் செய்யும் போது இரத்த ஓட்டம் அதிகமாகி வீக்கம் குறைந்துவிடும். நிணநீர் வீக்க அழற்சியை குறைத்து முகம் தெளிவு பெற உதவி செய்யும்.
கண்கள் பாதுகாப்பு
குடித்த பிறகு உங்க கண்கள் எல்லாம் சிவந்து போய் காணப்படும். எனவே அதை சரிசெய்வதும் அவசியமான ஒன்றாகும். கண் சொட்டு மருந்துகளை பயன்படுத்தி கண்களுக்கு ஈரப்பதமூட்டுங்கள். காலையில் எழுந்ததும் ஒரு கப் காபி குடியுங்கள். அதிகமாக வேண்டாம். உடம்பிற்கு நல்லது கிடையாது. கண்களுக்கு வீக்கம், கருப்பு தென்பட்டால் கண்சீலர் போன்ற அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தி மறைத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் அவசரத்திற்கு உதவி செய்யும்.
கண்சீலரை எப்படி பயன்படுத்த வேண்டும்
கொஞ்சமாக கண்சீலரை எடுத்து அதை கண்களுக்கு கீழே தடவிக் கொள்ளுங்கள். இப்பொழுது கை விரல்களைக் கொண்டு பரப்பி விடுங்கள். லேசாக செய்யவும் ரொம்பவும் அழுத்த வேண்டாம். இது உங்கள் கண்களுக்கு நல்ல லுக் கொடுக்கும்.
வலி நிவாரணி மாத்திரைகள்
ஹேங்ஓவருக்குப் பிறகு உங்களுக்கு தலைவலி வர வாய்ப்புள்ளது. நைட் பார்ட்டிகளில் நீங்கள் குடித்து விட்டு காலையில் எழும் போது உங்களுக்கு தலை வலி வர வாய்ப்புள்ளது. எனவே கண்கள் சிவப்பாக வீங்கி போய் இருத்தல், தலைவலி இவற்றை போக்க அஸ்பிரின் போன்ற வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.
உங்கள் சுவாசத்தை சரிசெய்யுங்கள்
ஹேங்ஓவர் இருந்தால் உங்கள் வாயும் துர்நாற்றம் வீசும். இதனால் உங்களால் மற்றவர்களுடன் சரியாக பேச முடியாது. எனவே வாயிலிருந்து வரும் மாவு போன்ற துர்நாற்றத்தை தடுக்க பல் துலக்கி மவுத் வாஷ் எல்லாம் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு புத்துணர்வான சுவாசத்தை கொடுக்கும். மற்றவர்களுடன் பேசும் போது சங்கோஜனம் இல்லாமல் பேசலாம்.
கருத்துக்களேதுமில்லை