பெண்கள் உச்சமடைதலில் 11 வகை இருக்காம்… என்னென்ன தெரியுமா?
உடலுறவு என்பது ஆண் பெண் வாழ்க்கையில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. உடலுறவு உச்சம் குறித்து ஏகப்பட்ட ஆராய்ச்சிகள், தகவல்கள் வந்தால் கூட இன்னமும் இந்த பாடத்தில் ஆண்கள் தேர்ச்சி பெறாதவர்களாகவே இருக்கிறார்கள். பெண்களை எப்படி உச்சம் அடைய வைக்க வேண்டும் என்பது நிறைய ஆண்களுக்கு தெரிவதில்லை. நிறைய பேருக்கு உடலுறவு என்பது சில நிமிட விஷயங்களாகவே இருக்கிறது. ஆனால் ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலுறவு இன்பமாக இருக்க சில முன் விளையாட்டுகள் தேவை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சில வகையான உடல் சார்ந்த தீண்டல்கள் கூட பெண்களை உச்சமடைய வைக்கும். எந்த வித மசாலாக்களும் இல்லாமல் நீங்கள் உடலுறவு கொள்வது ஒருநாள் சலிப்பை உண்டாக்க வாய்ப்புள்ளது. உங்கள் பாலியல் எல்லையை கொஞ்சம் விரிவுபடுத்த முயல வேண்டும். இந்த புணர்ச்சி தீண்டல்கள் தான் முதலில் உங்க உடலை ஹார்மோன்களை செக்ஸிற்கு தயார்படுத்தும். முன் விளையாட்டுகள் இல்லாமல் செக்ஸ் வைக்கும் போது அது வலி மிகுந்ததாக மாற வாய்ப்புள்ளது. முன் விளையாட்டுகளின் வெவ்வேறு விதமான ரசனை பொருத்து உங்களின் பாலியல் தூண்டலும் உச்சம் பெறும். ஆணும் பெண்ணும் இணைந்து வெவ்வேறு முன் விளையாட்டுகளில் ஈடுபடுவது உங்க செக்ஸின் தீவிரம் மற்றும் கால அளவை அதிகரிக்க வாய்ப்புள்ளது. உடல் சார்ந்த தீண்டல்கள் உங்க மன அழுத்தத்தை போக்கி உங்களை நெருக்கமாக உணர வைக்கும்.
ஆனால் பெரும்பாலான ஆண்கள் நேரடியாக செக்ஸில் ஈடுபடுவதையே விரும்புகிறார்கள். அவர்களுக்கு செக்ஸ் உச்சம் அதுவாக இருந்தால் கூட பெண்களுக்கு செக்ஸ் உச்சம் என்பது தீண்டல்களில் உள்ளது. எனவே உடலுறுவின் போது பெண்களை இன்பத்தில் திளைக்க வைக்க இந்த 11 விதமான புணர்ச்சி விளையாட்டுகளில் நீங்கள் ஈடுபடலாம்.
கிளிட்டோரல் உச்சம்
பெண்ணுறுப்பில் உள்ள மிக முக்கியமான மென்மையான பகுதி இந்த கிளிட்டோரல். இது புணர்ச்சியின் பீடம் என்று கூறலாம். பெரும்பாலான பெண்களுக்கு இந்த இடத்தை தொடும் போது உச்சத்தை அடைகிறார்கள். இது ஒரு பேரின்ப இடம் என்று கூறலாம். இந்த மறைக்கப்பட்ட பகுதி பெண்களை உச்சமடைய வைக்க மிகவும் பயன்படுகிறது. அவர்களை உணர்ச்சிவசப்படுத்துகிறது. எனவே தான் பெண்கள் இங்கே வெவ்வேறு வகையான தொடுதல்களை விரும்புகிறார்கள். அறிவியல் ரீதியாக பார்த்தால் இந்த கிளிட்டோரல் பகுதியில் ஆண்குறியில் இருப்பதைப் போல ஏராளமான நரம்புகள் உள்ளன. இந்த நரம்புகள் நேரடி மற்றும் மறைமுக தூண்டல்களால் புணர்ச்சியை உண்டாக்குகிறது. அந்த பகுதியை தொடும் போது பெண்களுக்கு இரத்த ஓட்டம் அதிகரித்து பாலியல் உணர்வு ஏற்பட ஆரம்பிக்கிறது. ஜர்னல் ஆஃப் செக்ஸ் அண்ட் மேரிடல் தெரபியின் ஒரு ஆய்வில், பல வகையான கிளிட்டோரல் தொடுதல், குறிப்பாக மேல் கீழ் வட்டமாக தொடுதல் புணர்ச்சிக்கு வழி வகுக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே உங்க துணையை உச்சம் அடைய வைக்க நீங்கள் விரும்பினால் கிளிட்டோரல் விளையாட்டுகளை கையில் எடுங்கள்.
ஜி – ஸ்பாட் தீணடல்
பெண்ணுறுப்பு திறப்பிற்கும் கருப்பை வாய்க்கும் இடையின் பாதியில் இருக்கும் பகுதியே ஜி-ஸ்பாட் என்று கூறப்படுகிறது. இந்த பகுதியை கண்களால் பார்க்க முடியாது. ஆனால் தொடுதல் மூலம் நீங்கள் இதை உணர முடியும். பெண்ணுறுப்பினுள் விரல்களை செலுத்தி விளையாடும் விளையாட்டால் புணர்ச்சியை ஏற்படுத்தலாம். இந்த பகுதி தொடும் போது பஞ்சு போன்று இருக்கும். அந்த இடத்தை மென்மையாக அழுத்துவதாலும் வருடுவதாலும் பெண்கள் ஜி – ஸ்பாட் புணர்ச்சியை பெறுகின்றனர். பாலியல் தூண்டலால் உணர்ச்சி பெறும் போது ஜி ஸ்பாட் பகுதியில் இரத்த ஓட்டம் அதிகமாகி புடைக்க ஆரம்பிக்கும். அப்பொழுது தான் உங்க பாலியல் இன்ப க்ளைமாக்ஸ்ம் இன்பகரமாக இருக்க முடியும்.
எல்லாம் கலந்த புணர்ச்சி விளையாட்டுகள்
கலப்பு புணர்ச்சி விளையாட்டு என்பது ஒரே நேரத்தில் எல்லா வகையான தீண்டல்களையும் செய்வது ஆகும். கிளிட்டோரல் தொடுதல், ஜி ஸ்பாட் தொடுதல், முலைக்காம்பு தொடுதல் என்று ஒரே நேரத்தில் எல்லா தீண்டல்களையும் செய்யும் போது பெண்கள் அதிக செக்ஸ் உணர்வை பெறுகின்றனர். இந்த தீண்டல்கள் அவர்களை எளிதாக உச்சத்தில் அடைய வைக்க உதவும். பெண்களுக்கு செய்யும் அதிக தீண்டுதல் அதிக இரத்த ஓட்டத்தை ஏற்படுத்தி அவர்களை அதிக உச்சத்தை அடைய வைக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே படுக்கை அறைக்கு செல்லும் போது எல்லாம் கலந்த புணர்ச்சி விளையாட்டில் ஈடுபட்டு இன்பத்தை காணுங்கள்.
குத வழி புணர்ச்சி விளையாட்டு
ஆசன வாய் அல்லது குத வழி செக்ஸ் செய்ய சில பெண்களே விரும்புகின்றனர். இதில் பாலியல் உணர்வு சரியாக இல்லை என்றால் பெண்களுக்கு வலி ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஆசன வாய் பெண்ணுறுப்பு அருகில் இருப்பதாலும் இதில் பெரினியம் என்ற மெல்லிய திசுக்களாலும் இணைக்கப்பட்டு உள்ளன. இடுப்புத் தசை உட்பட பல நரம்புகளும் இங்கே காணப்படுகிறது. அதனால் குத வழி விளையாட்டில் ஈடுபடும் போதும் பெண்கள் பாலியல் தூண்டல் களை பெறுகின்றனர். ஆனால் இந்த வகை செக்ஸ் தொடர்பை செய்வதற்கு முன் உங்க துணையின் ஒப்புதலையும் பெற்றுக் கொள்வது நல்லது. பெருட்பாலான பெண்கள் இந்த முறையை விரும்புவதில்லை.
ஆழமான ஈரோஜெனஸ் பகுதிகள்
பெண்ணுறுப்பில் கிளிட்டோரல் மற்றும் ஜி ஸ்பாட் இவற்றை அடுத்து ஆழமாக உள்ளே செல்லும் போது ஈரோஜெனஸ் என்ற பகுதியும் காணப்படுகிறது. எனவே இந்த மென்மையான ஈரோஜெனஸ் பகுதியை தொடும் போது விரல்களால் வருடும் போது பெண்கள் ஆழ்ந்த பெண்ணுறுப்பு புணர்ச்சியை சந்திக்கின்றனர்.
கருப்பை வாய்க்கு கீழே பெண்ணுறுப்பின் முன்புற சுவரில் ஏ-ஸ்பாட் வருகிறது. அடுத்தது ஓ-ஸ்பாட் என்ற பகுதி , பெண்ணுறுப்பின் பின்புற சுவரில், கிட்டத்தட்ட கருப்பை வாயின் பின்னால் காணப்படுகிறது. இங்குள்ள தசை நார்கள் அதிக உணர்திறன் கொண்ட நரம்புகளைக் கொண்டுள்ளது. எனவே தான் பெண்ணுறுப்பில் ஆண்குறி உள்ளே நுழையும் போது ஏற்படும் உராய்வினால் நரம்புகள் தூண்டப்பட்டு புணர்ச்சி மோலோங்குகிறது. உடலுறவு இன்பகரமானதாக இருக்கிறது. இந்த புணர்ச்சியின் போது வெளிப்படும் ஆக்ஸிடோசின் ஹார்மோனால் முழுக் கருப்பையும் சுருங்கக் கூடும்.
சுறுசுறுப்பான புணர்ச்சி விளையாட்டுகள்
ஆண்களுக்கு மட்டும் தான் விந்தணு திரவம் வெளிப்படும் என்றில்லை. பெண்களுக்கும் உடலுறவில் ஈடுபடும் போது விந்துதள்ளல் இருக்கும். பெண்கள் உடலுறுவில் தூண்டப்படும் போது உணர்ச்சி பெறும் போது சிறுநீர்க்குழாய் அல்லது மேற்பரப்பை சுற்றியுள்ள சுரப்பிகளில் இருந்து திரவம் வெளியேற்றப்படும். இது ஆண்குறி உள்ளே நுழைவதற்கு ஏதுவான வழுவழுப்பு தன்மையை அங்கே கொடுக்கும். இந்த திரவம் பார்ப்பதற்கு சிறுநீர் போன்று இல்லாமல் சளி மாதிரி பிசுபிசுப்பு தன்மையுடன் தெளிவாக இருக்கும். ஜி ஸ்பாட் தொடுதல் ஒரு சுறுசுறுப்பான புணர்ச்சிக்கு வழி வகுக்கிறது. ஒரு 10 – 50 சதவீத பெண்கள் சுறுசுறுப்பான புணர்ச்சி தூண்டலை பெறுகிறார்கள்.
கருப்பை வாய் புணர்ச்சி விளையாட்டு
உங்க துணையுடனான செக்ஸ் முன் விளையாட்டுகள் உங்க உடல் மற்றும் மன நலனை மேம்படுத்த உதவும். கலோரிகளை எரிப்பது மற்றும் உங்க பெண்ணுறுப்பு சுவர்களை வலுப்படுத்துவது முதல், மன அழுத்தத்தைக் குறைப்பது, தூங்க உதவுவது வரை செக்ஸ் பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே அடிக்கடி துணையுடன் பாதுகாப்பான உணர்வுப் பூர்வமான செக்ஸில் ஈடுபடுவது சிறந்தது.
முலைக்காம்பு புணர்ச்சி விளையாட்டுகள்
பெண்களின் மார்பகங்கள் மற்றும் முலைக்காம்புகள் மிகவும் உணர்வுப் பூர்வமான இடமாக உள்ளது. அவற்றில் ஏராளமான நரம்புகள் மற்றும் சென்ஸிட்டிவ் ஆன சருமங்கள் காணப்படுகின்றன. எனவே அவற்றை தொடுவதன் மூலம் பெண்கள் மிகுந்த புணர்ச்சியை அடைகின்றனர். ஏன் அந்தப் பகுதியை தொடும் போது பெண்கள் புணர்ச்சியை பெறுகின்றனர் என்று ஆராய்ச்சியாளர்களுக்கு தெரியவில்லை. எனவே பெண்களை உச்சம் அடைய வைக்க நினைத்தால் அவர்களின் மார்பகங்களில் தீண்டுதலை ஏற்படுத்தலாம்.
உடற்பயிற்சி புணர்ச்சி விளையாட்டுகள்
உங்க துணையுடன் சேர்ந்து வொர்க் அவுட் செய்யும் போது கூட சில புணர்ச்சி விளையாட்டுகளில் ஈடுபடலாம். கணக்கெடுக்கப்பட்ட 530 பெண்களில் 370 பேர் உடற்பயிற்சி செய்யும் போது புணர்ச்சி அல்லது பாலியல் இன்பத்தை அனுபவித்ததாக இந்தியானா பல்கலைக்கழகத்தின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பிட்டப் பகுதியில் உள்ள தசைகளை அழுத்துவதன் மூலம் சில பெண்கள் உணர்ச்சியை பெறுகின்றனர்.
தூக்க புணர்ச்சி விளையாட்டுகள்
சில பெண்களுக்கு சிற்றின்பம் குறித்த கனவுகள் வரும் போது புணர்ச்சியை பெறுகின்றன. 37% பெண்களுக்கு 45 வயதிற்குள் இந்த தூக்க புணர்ச்சி ஏற்படுவதாக ஆய்வு கூறுகிறது. தூக்கத்தில் ஏற்படும் புணர்ச்சி கவர்ச்சியான எண்ணத்தையும் பிறப்புறுப்பில் இரத்த ஓட்டம் அதிகரிப்பையும் தருகிறது. இந்த தூக்க புணர்ச்சி நிலையில் பெண் விழித்திருக்கா விட்டால் கூட உச்சநிலை அடைய முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
பல வகையான புணர்ச்சிகள்
பல வகையான புணர்ச்சி விளையாட்டில் ஈடுபடும் போது பெண்கள் உச்ச நிலையை அடைகின்றனர். பெண்கள் தங்கள் முதல் புணர்ச்சியின் போது குறிப்பிட்ட பரவச நிலையை அடைகின்றனர். மீண்டும் மீண்டும் புணர்ச்சி விளையாட்டு அவர்களை உற்சாகப்படுத்தும். அது உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், உணர் திறனை அதிகரிக்கும். ஆண் பெண் தாம்பத்ய வாழ்க்கையை மேம்படுத்த உதவும். உங்கள் உடலுறவு மகிழ்ச்சியாக அமைய உதவி செய்யும்.
கருத்துக்களேதுமில்லை