காரைதீவு 12ஆம் பிரிவிலுள்ள 300 குடும்பங்களுக்கு தவிசாளர் கே.ஜெயசிறில் ஏற்பாட்டில் நிவாரணப் பொதிகள் வழங்கி வைப்பு….
காரைதீவு பிரதேசசபை தவிசாளர் கே.ஜெயசிறில் அவர்களின் ஏற்பாட்டில் பொதி செய்யப்பட்டு இன்று காரைதீவு 12ஆம் பிரிவிலுள்ள வறிய குடும்பங்களுக்கான நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
மிகவும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட நாளாந்தம் கூலி வேலை செய்கின்ற குடும்பங்கள் 300 பேருக்கு நிவாரணப் பொதிகள் வழங்கும் நிகழ்வில் முதல் கட்டமாக இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து காரைதீவின் பல பிரிவுகளுக்கு நிவாரணப் பொதி வழங்கப்பட்டு வருகின்றது எனவும். காரைதீவு வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு இந்த நிவாரணப் பொதிகள் வழங்கி வைப்பதாக தவிசாளர் கே.ஜெயசிறில் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை