நாளை ஜனாதிபதியினை சந்திக்கின்றனர் சஜித் தலைமையிலான அணியினர்!
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான சில கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து பேசவுள்ளனர்.
நாளை(திங்கட்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா தொற்று தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளது.
கொரோனா தொற்று பரவலின் பின்னர், ஜனாதிபதியுடன் சஜித் பிரேமதாச தலைமையிலான சில கட்சிகளின் தலைவர்கள் முன்னெடுக்கும் முதலாவது சந்திப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை