சினிமாவைப் பொறுத்தவரையில் இயக்குனர் ஒரு படத்தின் கதையை அவருக்கு பிடித்த நடிகர்களிடம் அல்லது அந்த கதைக்கு பொருத்தமான நடிகர்கள் சிலரிடம் கூறுவார். ஆனால் ஒரு சில சந்தர்ப்பங்களில் அந்த நடிகர்கள் நடிக்க முடியாமல் போகும். இப்படி பல படங்கள் உள்ளன. அந்த லிஸ்டில் கில்லியும் உண்டு.
2004 ஆம் ஆண்டு வெளிவந்த கில்லி திரைப்படம் தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளிவந்த ஒக்கடு என்ற படத்தின் ரீமேக் தான். இந்த படத்தின் விறுவிறுப்பான காட்சிகளை ரசிகர்கள் இன்றளவும் மறக்கவில்லை, ஏனென்றால் 16 வருடம் கழித்து சன் டிவியில் இந்த திரைப்படம் சில நாட்களுக்கு முன்னதாக ஒளிபரப்பானது. வெளியிட்ட சில நிமிடங்களிலேயே விஜய் ரசிகர்கள் கில்லி என்ற ஹஷ்டாக்கை இந்திய அளவில் டிரெண்டாகி விட்டனர்.
இவ்வளவு பிரம்மாண்ட வெற்றி கொடுத்த கில்லி படத்தில் முதலில் விஜய்க்கு கதை சொல்ல வில்லையாம். விஜய்க்கு முன்னதாக சியான் விக்ரம் நடிக்க இருந்தாராம். ஆனால் மற்ற படங்களில் பிஸியாக இருந்ததால் இந்த வாய்ப்பு அவரை விட்டு கைநழுவிப் போனது.
அதற்குப் பின்னர் தான் தளபதி விஜய் இந்த படத்திற்கு பொருத்தமான கதாபாத்திரம் என்று தரணி முடிவு பண்ணி விட்டாராம். இதனை இந்த படத்தில் வேலை பார்த்த ஒளிப்பதிவாளர் கோபிநாத் ஒரு பேட்டியில் தெளிவுபடுத்தி இருப்பார்.
இதுமட்டுமில்லாமல் தளபதி விஜய் அனைத்து காட்சிகளையும் ஒரே டேக்கில் முடித்து விடுவாராம், எந்த ஒரு மேக்கப்பும் இல்லாமல் இந்தப் படத்தில் பட்டையை கிளப்பி இருப்பார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ரீமேக் படம் என்றாலும் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்தவாறு விறுவிறுப்பான காட்சிகளை அமைத்த இயக்குனர் தரணிக்கு இந்த படத்தின் வெற்றிக்கு பெரும் பங்கு உண்டு. ஒளிப்பதிவாளர் கோபிநாத் கில்லி, குருவி, வேட்டைக்காரன் போன்ற மூன்று படங்களில் தளபதி விஜயுடன் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை