கொரோனா பீதிக்கு இடையிலும் கணவருக்கு லிப் லாக் முத்தம் – வீடியோவை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகை ஸ்ரேயா
நடிகை ஸ்ரேயா சரணுக்கு அடுத்ததாக நரகாசூரன், சண்டக்காரி என படங்கள் ரிலீஸ்க்கு தயாராக இருக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரேய் கொஸ்சேவ் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கும் அவர் சினிமா வாய்ப்புக்காக தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு விதித்துள்ளது.
இந்நிலையில் அவர் தற்போது சமையலறையில் தன் கணவருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்து “ஆண்கள் தங்கள் மனைவிக்கு எவ்வாறு உதவுகிறார்கள் என்ற வீடியோவை வெளியிட வேண்டும் என கூறி நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி, நடிகர் ஆர்யா, நடிகர் அல்லு அர்ஜூன் ஆகியோரை சேலஞ்ச் டாஸ்க் மூலம் அழைத்திருக்கிறார்.
கொரோனாவுக்காக அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றி வரும் இக்காலத்தில் ஸ்ரேயா இப்படியான ஒரு Video வெளியிட்டிருப்பதை நெட்டிசன்கள் விமர்சிக்க தொடங்கியுள்ளார்கள்.
கருத்துக்களேதுமில்லை