கொசுறாக வாங்கும் கறிவேப்பிலையில் இத்தனை நலன்களா!

கடைகளில் காய்கறி வாங்கிவிட்டு கொசுறாக கறிவேப்பிலை வாங்குவோம். குழம்பு தாளிக்கும்போது சிறிது கறிவேப்பிலையைப் பயன்படுத்துவோம். முடிந்த வரை கறிவேப்பிலை வராமல் குழம்பு, கிரேவியை எடுப்போம். வந்துவிட்டால் அதை அப்படியே தூக்கி தூர வைத்துவிடுவோம்… கறிவேப்பிலைக்கு நாம் கொடுக்கும் மதிப்பு அவ்வளவுதான். அதன் மருத்துவ பலன்கள் தெரிந்தால் அப்படி செய்ய மாட்டீர்கள் என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.

curry-leaves-78

கறிவேப்பிலையில் உள்ள கார்போசால் என்ற நுண்ணூட்டச்சத்து உடலில் கொலஸ்டிரால் அளவைக் குறைக்க உதவுகிறது. தினமும் கறிவேப்பிலையை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல் என இரண்டையும் குணப்படுத்தும் ஆற்றல் கறிவேப்பிலைக்கு உள்ளது. வயிறு கலக்கினால் உலர் கறிவேப்பிலை பொடியை மோரில் கலந்து குடிக்கலாம். கறிவேப்பிலை இலையை அரைத்து மோரில் கலந்து குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். கறிவேப்பிலை செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. செரிமானத்துக்கு தேவையான அமிலங்களை சுரக்கத் தூண்டுகிறது.

buttermilk

கறிவேப்பிலை பாக்டீரியா கிருமிக்கு எதிராக செயல்பட்டு உடலைக் காக்கிறது. இதில் பாக்டீரியாவை அழிக்கும் தன்மை மட்டுமில்லை, புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மையும் உள்ளது.

கறிவேப்பிலை ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது. மேலும், இன்சுலினை உற்பத்தி செய்யும் செல்களின் பாதுகாப்புக்கும் துணை புரிகிறது. இதில் தாமிரம், துத்தநாகம், இரும்புச்சத்து உள்ளதால் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

blood-sugar-level-8

கறிவேப்பிலை தலை முடியின் அடி வேரைத் தூண்டி முடி வளர்ச்சிக்கு துணை புரிகிறது. மேலும், முடிகள் உதிர்வது, உடைவது, இளநரை உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் தீர்வளிக்கிறது. கறிவேப்பிலையை அரைத்து தலையில் தடவுவதன் மூலம் பொடுகு பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.