அஜித்தை வளைத்துப் போட நினைக்கும் தயாரிப்பாளர்கள்.. அனைவர்க்கும் டாட்டா காமிக்கும் தல
தல அஜித்தை வைத்து படம் தயாரிக்க பிரபல நிறுவனங்கள் மற்றும் பல தயாரிப்பாளர்கள் தொடர்ந்து போட்டி போட்டுக் கொண்டு வருகின்றனர்.
அஜித் நடிப்பில் சமீப காலமாக வெளிவரும் திரைப்படங்கள் வசூலில் மிகப்பெரிய சாதனைகளை படைத்து வருகிறது. அதன் காரணமாகவே தல அஜித்தின் படத்தை தயாரிக்க அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தல அஜித் இடம் உள்ள ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் ஒரு தயாரிப்பாளரை பிடித்து விட்டால் அவருக்கு தொடர்ந்து மூன்று நான்கு படங்கள் கூட நடித்துக் கொடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இயக்குனருக்கும் அதேதான். அந்த வகையில் சிறுத்தை சிவா அஜீத்தை வைத்து தொடர்ந்து நான்கு படங்கள் இயக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது எச் வினோத் தொடர்ந்து இரண்டாவது முறையாக அஜித்துடன் இணைந்துள்ளார்.
வலிமை படத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக தல அஜித்தை வைத்து படம் எடுக்க போனிகபூர் ஆசைப்படுவதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
அதேபோல் சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் விஸ்வாசம் படத்திற்கு பிறகு மீண்டும் அஜித்துடன் இணைய ஆர்வமாக உள்ளாராம். அஜித் யாருடன் இணைவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இதே தமிழ் சினிமாதான் ஒரு காலத்தில் அஜித் சினிமாவை விட்டு விலக வேண்டுமென கங்கணம் கட்டி வந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை