குயின்- 2? கௌதம் மேனன் அடுத்த அதிரடி.. செம மாஸ்

தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குனர் திரு கெளதம் மேனன். காதலை தனது தனி தனிமையாக கொண்டு படத்தை உருவாகும் ஒரு முக்கிய இயக்குனர்.

சமீபகாலமாக இவர் நடிக்கவும் துவங்கிவிட்டார். ஆம் அண்மையில் வெளிவந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல் படத்தில் இவரின் நடிப்பு மிக சிறந்த முறையில் வரவேற்க்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இவர் தற்போது கமல் ஹாசன் அவர்களை வைத்து வேட்டையாடு விளையாடு 2 படத்தை இயக்க போகிறார் என்று சில தகவல்கள் கசிந்திருந்தது.

இந்நிலையில் தற்போது அண்மையில் இவர் இயக்கத்தில் வெளிவந்திருந்த குயின் வெப் சீரிஸின் இரண்டாம் பாகத்தை இவர் இயக்க போகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இதனை குறித்து இயக்குனர் கெளதம் மேனன் தான் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட வேண்டும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.