உண்மைத் தகவலை மறைப்பதால் பாரிய விளைவுகள் ஏற்படக்கூடும்! – சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை
கொரானா வைரஸ் தொற்றுடைய சிலர் உண்மையான தகவல்களை வழங்காதுள்ளனர் என்று சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த நோய் தொற்றிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கும் வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கும், நோய் குறித்த சரியான தகவல்களை வழங்குவதே சாலச் சிறந்தது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
நோய் குறித்தான தகவல்களை மறைப்பதால் பாரிய விளைவுகள் ஏற்படக்கூடும் என்று எச்சரித்துள்ள அவர், மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை