உலக அமைதி வேண்டி இரணைமடு கனகாம்மபிகை அம்மன் ஆலயத்தில் விசேட யாகம்

உலக அமைதி வேண்டி கிளிநொச்சிஇரணைமடு கனகாம்மபிகை அம்மன் ஆலயத்தில் நேற்று கரைச்சி பிரதேச சபையின் ஏற்பாட்டில் விசேட யாகம் இடம்பெற்றது.

தற்போது இந்த உலகத்தையே மிகவும் ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இந்த உலகம் அமைதி இன்றி இருக்கிறது. இந்த கொடூர தாக்கத்தில் இந்த உலகம் மிக விரைவாக விடுபெற்று மக்களுக்கு சாந்தியும் சமாதானமும் கிடைக்க வேண்டும் என குறித்த யாகம் இடம்பெற்றது.
குறித்த யாகப் பூஜையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர்கள் ஆலய அறங்காவலர் சபையினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.