இயல்பு நிலைக்கு திரும்பியது சீனாவின் வூகான் நகரம்
கொரோனா வைரஸ் முதலில் பரவ ஆரம்பித்த சீனாவின் வூகான் நகரில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.
வீடுகளில் அடைபட்டு கிடந்த மக்கள் இரண்டரை மாதங்களுக்குப் பின்னர் ஊரை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் கொரோனா உயிரிழப்புகள் குறைவடைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் மெல்ல மெல்ல அப்பகுதி கொரோனாவில் இருந்து விடுபடுகிறது.
இதன் பலனாக வூகானில் இருந்து ஹூபேய் மாகாணத்திற்குள்ளாக ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. முதல் ரயில் இன்று(புதன்கிழமை) காலை புறப்பட்டுச் சென்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதில் 276 பயணிகள் பயணித்தனர். இதே போன்று நெடுஞ்சாலைகளும் திறக்கப்பட்டு மக்கள் கார்களில் அணி அணியாக செல்கின்றனர். விமான சேவைகளும் அப்பகுதியில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கருத்துக்களேதுமில்லை